பிரசவம் பார்க்க உதவிய தொலைக்காட்சி நிகழ்ச்சி

ekuruvi-aiya8-X3

mam_2கனடாவில் பெண் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்த பிரசவ காட்சி மூலமாக, மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newfoundland மாகாணத்தில், Christia Tizzard என்னும் பெண் கடந்த சனிக்கிழமை அன்று Shoppers Drug Mart என்ற கடையில் இருந்து வெளியேறியுள்ளார். வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் இடத்திற்கு அவர் சென்றபோது,
நபர் ஒருவர் தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு உதவுமாறு Christia-விடம் கேட்டுள்ளார். உடனே அவருக்கு உதவ நினைத்த Christia-விற்கு பிரசவம் பார்த்த முன் அனுபவம் இல்லை.

எனினும், தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பிரசவம் எப்படி பார்ப்பது என்பதை செய்து காட்டியுள்ளனர். அதனைப் பார்த்த அனுபவத்தின் மூலமாக குறித்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார்.

இது குறித்து Christia கூறுகையில், ‘என்னால் இப்போதும் நான் செய்ததை நம்ப முடியவில்லை. முதலில் அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதை கண்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை.

பின்னர், ரியாலிட்டி நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செய்து காட்டிய பிரசவத்தினைப் பார்த்தது ஞாபகம் வந்தது. அந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செய்தது போலவே நானும் முயற்சி செய்தேன்.

அந்த பெண்ணிடம் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள், மற்றும் அழுத்தத்தைக் கொடுங்கள் என கூறினேன்.
பிறகு, அந்த பெண் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தையை கையில் வாங்கிய அதன் தந்தை அப்படியே உறைந்து போயிருந்தார்.

மூன்று பேராக அந்த கடைக்குள் இருந்த நாங்கள், பின்னர் நான்கு பேராக வெளியே வந்தோம். இது அற்புதமான தருணம்’ என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த தம்பதி, குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றனர்.

Share This Post

Post Comment