கனடாவில் தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்

Facebook Cover V02

shoot_28கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தமிழ் வர்த்தகர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடிய நேரடிப்படி இன்று மதியம் 1 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்கார்பரோ (Scarborough) Eglinton and Brimley சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள பிரபல நகையகத்தில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நகையகத்தின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் குறித்து மூன்று சந்தேக நபர்களை காவல் துரையினர் தேடி வருக்கின்றனர் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 3 சந்தேக நபர்களை தாம் அவதானித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஆண் மற்றும் 2 பெண் சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்ததாகவும், அவர்கள் தங்கள் முகத்தை மூடியிருந்ததாகவும் நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

கடை உரிமையாளர் மீது மூன்று முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் பல பாடசாலைகள் உள்ளதாக தெரிவித்த பொலிஸார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment