கண்ணுக்குள் பச்சை குத்திய மாடல் அழகி – பார்வை பறிபோகும் அபாயம்

ekuruvi-aiya8-X3

model04171கனடாவை சேர்ந்த மாடல் அழகி கேட் கேளிங்கர் . இவர் தனது உடல் அமைப்பை மாற்றி அமைப்பதில் ஆர்வம் உடையவர். உடலின் பல உறுப்புகளில் மாற்றம் செய்து போட்டோவை ‘பேஸ்புக்’ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது கண்ணில் விழி வெண்படலத்தின் நிறத்தை மாற்றி புதுமை படைக்க விரும்பினார். அதற்காக கண் டாக்டரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கண்ணுக்குள் விரும்பிய நிறத்தை பச்சை குத்தலாம் என பரிந்துரை செய்தார்.

அதை தொடர்ந்து அவர் கருஞ்சிவப்பு (‘பர்பிள்’) நிறத்தில் மையை தேர்வு செய்து பச்சை குத்துவது போன்று ஊசி மூலம் கண் விழி வெண் படலத்தில் செலுத்தினார். அதை தொடர்ந்து விழி வெண் படலம் கருஞ்சிவப்பு நிறத்தில் மாறியது.

ஆனால் கண்ணுக்குள்ளேயும், இமைப்பகுதியும் வீங்கியது. வேதனை அதிகரித்தது. அதையடுத்து அவர் டாக்டரிடம் சென்று பரிசோதித்தார். அவர் சில கண் மருந்துகளை சிபாரிசு செய்தார்.

அதை பயன்படுத்தியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வேதனைப்பட்டு வந்த அவரின் கண் பார்வை தற்போது சிறிது சிறிதாக மங்கி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

இதற்கிடையே, தனது போட்டோவை ‘பேஸ்புக்’ சமூக வலை ளத்தில் வெளியிட்ட கேட் கேளிங்கர் தனது நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். கண்ணுக்குள் பச்சை குத்தியதால் தான் படும் கஷ்டங்களையும், பார்வை பறி போகும் அபாயம் இருப்பதையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், என்னை போன்று யாரும் தங்களது கண்ணில் பச்சை குத்த வேண்டாம். என் நடவடிக்கையை பின்பற்ற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தனது கண்ணில் தவறுதலாக பச்சை குத்தியதாக சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment