மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதி இடைத்தேர்தல் – லிபரல் கட்சி வெற்றி

ekuruvi-aiya8-X3

can_4_1ஒன்ராறியோவிலுள்ள கூட்டாட்சி தேர்தல் மாவட்டமான மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் மேரி வெற்றி பெற்றுள்ளார்.

189 இடங்களில் நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் 51.3 வீத அதிக வாக்குகளை பெற்று மேரி, 2355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேவேளை, இரண்டாவது அதிகபட்ச வாக்குகளை கன்சர்வேடிவ் கட்சியின் ராகவன் பரஞ்சோதி பெற்றுள்ளார்.

மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிருந்த நிலையில், லிபரல் கட்சியின் மேரி 9 ஆயிரத்து 856 வாக்குகளையும், கன்சர்வேடிவ் கட்சியின் ராகவன் பரஞ்சோதி 7 ஆயிரத்து 501 வாக்குகளையும் பெற்றிருந்த அதேவேளை, ஏனைய ஐந்து வேட்பாளர்களும் ஆயிரத்து 900 க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர்.

இடைத்தேர்தலில் 19 ஆயிரத்து 215 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Post

Post Comment