வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட கனடாவின் 150வது தேசிய தினம்

ekuruvi-aiya8-X3

can150கனடாவின் 150வது தேசிய தினம் நேற்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த தேசிய தின கொண்டாட்டங்களை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தொடக்கி வைத்தார். அத்தோடு கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ஸ், மறுமலர்ச்சியடைந்த தேசிய கலை மையத்தை திறந்து வைத்தார்.

ரொரன்றோவில் தேசிய தினத்தை முன்னிட்டு பல வானவேடிக்கை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் கனடாவின் பல்வேறு பகங்களிலும் விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு நாடாளுமன்ற வளாகத்தின் முன் மிகப்பெரிய விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அக்ரோபாட் இசை கலைஞர்களின் நிகழ்வுகள் என்பன பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கட்டடங்கள் கண்களை கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மூன்று வெவ்வேறு பிரிவுகளாக ஆளப்பட்டுவந்த வட அமெரிக்க பிராந்தியங்கள், 1867ஆம் ஆண்டு கனடா எனப்படும் ஒரு நாடாக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட நாளே கனடாவின் தேசிய நாளாக கொண்டாடப்படுகின்றது.

1868 ஆம் ஆண்டில் இருந்து இந்த யூலை மாதம் முதலாம் நாள் ‘டொமினியன் தினம்’ என அழைக்கப்பட்டு வந்த போதிலும், 1982ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கனடாவின் தேசிய தினம் என சட்டபூர்வமாக மாற்றம் பெற்றது.

Share This Post

Post Comment