மின்மாற்றி வெடிப்பு – புகை மண்டலமான ரொறன்ரோ

Thermo-Care-Heating

onta_02ஒன்ராறியோ மாகாணத்தின் வர்த்தக மாவட்டமான ரொறன்ரோவில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து மாவட்டத்தின் மையப் பகுதி முழுவதும் புகையினால் சூழ்ந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் மூடியுள்ளனர்.

வெடிப்பு சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை என ரொறன்ரோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மின்மாற்றியில் ஏற்பட்ட மேற்படி வெடிப்புச் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment