சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசுவதை தடுக்க கூடாது: ஜி.கே.வாசன்

ekuruvi-aiya8-X3

gk_vasanத.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சிகளில் அதிக இடங்களை கைப்பற்ற வியூகம் அமைக்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து 12 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க கூடிய வாய்ப்பை உறுதிப்படுத்தி கொள்கிறோம். 2-வது நிலையில் உள்ள இடங்களில் முதல் நிலைக்கு முன்னேற பாடுபடுவோம்.

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.

சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் மேற்கூரையை துளையிட்டு பல கோடி ரூபாய் கொள்ளை போனது விசித்திரமாக உள்ளது.

சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறார். அவர் பேசுவதை தடுக்க கூடாது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 99.9 சதவீத பேர் உண்மையாக இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment