விஜய் மல்லையாவுக்கு தண்டனை ஒத்திவைப்பு

ekuruvi-aiya8-X3

vijay_mallayaகாசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அளிக்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் மீதான விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஹைதரபாத் நகர நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை ஜி.எம்.ஆர். விமான நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தங்கள் விமானங்களை நிறுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கிங்ஃபிஷர் நிறுவனம் ஜி.எம்.ஆர். விமான நிறுவனத்துக்கு கொடுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிங்ஃபிஷர் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தலா ரூ.50 லட்சம் மதிப்பிலான இரண்டு காசோலைகள், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. இது குறித்து ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் ஜி.எம்.ஆர். நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவித்தது.

மேலும், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையையும் பிறப்பிக்கப்பட்டது. அப்போது, விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரங்களை மே 5-ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால், அன்றைய தினம் விஜய் மல்லையா ஆஜராகாததால் மே 9-ஆம் தேதிக்கு உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 353-ஆவது பிரிவின்படி (குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகாதபோதும் தண்டனை அறிவித்தல்) அன்றைய தினம் தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது,”தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்பாக குற்றவாளி தரப்பு வாதத்தையும் கேட்டறிய வேண்டியது அவசியமாகிறது’ எனக் கூறிய நீதிபதி தீர்ப்பு விவரத்தை மே 25-ஆம் தேதிக்கு அறிவிப்பதாகத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தண்டனை விவரம் புதன்கிழமை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான உத்தரவை ஜூன் 6-ஆம் தேதிக்கு நீதிபதி மீண்டும் ஒத்திவைத்தார்.

Share This Post

Post Comment