அமைச்சரவையில் மாற்றம் – புதிய அமைச்சர்கள் நியமிப்பு

ekuruvi-aiya8-X3

ministry1204பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 6 அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் ஏற்பட்ட பதவி வெற்றிடங்களுக்கு பதில் அமைச்சர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்பினர் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று குறித்த பதவிகளுக்கு புதிய பதில் அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன் அடிப்படையில் பதவியேற்றுள்ள அமைச்சர்களின் விபரம் வருமாறு:

சரத் அமுனுகம – திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய – அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும், பைசர் முஸ்தபா – விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மலிக் சமரவிக்ரம – சமூக வலுவூட்டல், நலன்புரி, கண்டி மரபுரிமைகள் மற்றும் தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share This Post

Post Comment