இன்று புதிய கட்சி துவக்குகிறார் தீபா கணவர் மாதவன்

ekuruvi-aiya8-X3

deepa_husஎம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபாவின் கணவர் மாதவன் இன்று (ஏப்ரல் 21) புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் நியமனத்தில் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 21ம் தேதி புதிய கட்சி துவங்கப் போவதாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மாதவன் அறிவித்தார்.

இதனையடுத்து, இன்று (ஏப்ரல் 21) காலை 10.30 மணியளவில் மாதவன், ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் தனது புதிய கட்சியை மாதவன் துவக்க உள்ளார். இது குறித்து மாதவனின் ஆதரவாளர்கள் கூறுகையில், புதிய கட்சிக்கு தீபா பேரவையின் கொடியையே பயன்படுத்த மாதவன் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, 4,5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார். மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் நிர்வாகிகளை நியமிப்பார் என்றனர்.

Share This Post

Post Comment