நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்

அனைவராலும் ஏகமனதாக கொண்டாடப்பட்ட நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் விம் கொக் காலமானார். நெதர்லாந்து மக்களால் மட்டுமன்றி இவரின் உதவிபெற்ற உலக நாட்டு மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர் விம் கொக் (வயது-80). இவர் நேற்று (சனிக்கிழமை) மாரடைப்பில் காலமானார்.

இவர் நெதர்லாந்தின் பிரதமராக இருந்த காலப்பகுதியில் (1994 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை) நாட்டின் சுகாதாரத்துறை, ஓய்வூதியம், கல்வித்துறை, சிறுவர்களுக்கான உபகாரங்கள் போன்றவற்றை மேம்படுத்திய பின்னரே, விம் கொக் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

கடந்த 1981 ஆம் ஆண்டுகளிலிருந்து நெதர்லாந்தில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் தோன்றிய ஓர்பால் திருமணம் தொடர்பான பிணக்குகளை சுமூகமாக்கி 2001 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக்கிய முதல் நாடாக நெதர்லாந்தை மாற்றிய விம் கொக்கே, 2002 ஆம் ஆண்டு முதன் முதலில் கருணைக்கொலையையும் சட்டபூர்வமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே நாணயத்தைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் விம் கொக் ஆவார்.

இவ்வாறாக பல சேவைகளை ஆற்றி, மக்கள் மனதை வென்ற முன்னாள் பிரதமர் விக், 2002 ஆம் ஆண்டு நெதர்லாந்து இராணுவ வீரர்கள் பொஸ்னியாவில் சமாதானக்காவலர்கள் என்ற பேரில் செல்வதற்கு கெபினட் உடன்பட்டமையைத் தொடர்ந்து, தனது பதவியை இராஜினாமா செய்தார்.

உலக நாடுகளின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மாத்திரமே எதிர்பார்த்து அதற்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்த விம் கொக்கின் இழப்பினையிட்டு, அவருடைய மனைவி றீடா மற்றும் அவருடைய மூன்று பிள்ளைகளும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.


Related News

 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *