உத்தரபிரதேசத்தில் நேதாஜியின் நெருங்கிய பாதுகாவலர் மரணம்

netaji_securityசுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி நடத்தி வந்தார். இந்த படையில் பணியாற்றியவர் கர்னல் நிசாமுத்தீன். உத்தரபிரதேசத்தின் அசம்காரில் வசித்து வந்த இவர் முதுமை காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 107. அவரது உடல் நேற்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 1942-ம் ஆண்டு அசம்காரில் இருந்து சிங்கப்பூர் சென்ற நிசாமுத்தீன், ஆங்கிலேயரின் ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்து விலகி நேதாஜியின் ராணுவத்தில் சேர்ந்தார். நிசாமுத்தீனிடம் கனரக ஆயுதங்களை கையாளும் வலிமையும், வாகன ஓட்டும் திறமையும் இருந்ததால், அவரை தனது நெருங்கிய பாதுகாவலராகவும், ஓட்டுனராகவும் நேதாஜி நியமித்தார். இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் என்ற உயர் பதவியும் அவருக்கு வழங்கினார்.

மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்த நிசாமுத்தீன் 1969-ல் அசம்கார் திரும்பினார். அங்கு தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். 1945-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டார் என்று கூறப்படும் தகவலை நிசாமுத்தீன் தொடர்ந்து மறுத்து வந்தார். அந்த சம்பவத்துக்கு பின்னரும் தான் நேதாஜியுடன் இருந்ததாக அவர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.


Related News

 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *