யார் யாரை தாக்கினார்? நேற்று யாழ். பல்கலையில் நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

Facebook Cover V02

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் “வெல்கம் பார்ட்டி” எனப்படும் நிகழ்வு வருடா வருடம் இடம்பெறுவது வழமை. குறித்த வருடத்தில் முதலாம் வருடத்துக்கு புகுமுகமாகும் மாணவர்களை வரவேற்று, சிரேஷ்ட மாணவர்களால் நிகழ்வுகள் நடத்தப்படும். கலை, முகாமைத்துவ, விஞ்ஞான, மருத்துவ பீட மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ற நாளில் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி நடத்துவர்.

இன்றும் அப்படித்தான். யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தனர். ஆனால் அதற்கான திட்டமிடல் கடந்த இரண்டு வாரங்களாகவே இடம்பெற்றது. அதன்படி, வழமைபோல நிகழ்ச்சி நிரலில் கடைபிடிக்கப்படும் தமிழ் கலாசார மேளதாள – பாடல்களுடன் ( நாதஸ்வர வரவேற்பு) முதலாம் வருட மாணவர்கள் அழைத்துவர விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.

download-3-1 ஆனால் நேற்றுமாலை யாழ்.பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வியைத் தொடரும் சிங்கள மாணவர்கள் புதியதொரு சர்ச்சையைக் கிளப்பினர். தாம் கொழும்பிலிருந்து சிங்கள பாரம்பரியமான கண்டிய நடனக் குழுவை அழைத்து வரவுள்ளதாகவும், அவர்களின் நடனத்தைக் கொண்டே புகுமுக மாணவர்கள் வரவேற்கப்பட வேண்டும் எனவும் வாதாடினர். புகுமுக மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்வு ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும், திடீரென ஒரு புதிய நிகழ்வை புகுத்த முடியாது எனவும், யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தின் படியே வரவேற்பு நிகழ்வு நடைபெறும் எனவும் தமிழ் மாணவர்கள் வாதிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண கலாசார ரீதியில் நிகழ்வை நடத்த தாம் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினர்.

அதன் பின்னர் இந்தப் பிரச்சினை விஞ்ஞான பீட பீடாதிபதியிடம் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டது. விஞ்ஞான பீடாதிபதி, சிங்கள மாணவர்களின் வாதத்தை ஏற்று, கண்டிய நடனத்தைக் கொண்டு, புகுமுக மாணவர்கள் வரவேற்கவேண்டும் எனக்கூறினார். பீடாதிபதியின் இந்த முடிவினால் விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களில் சிலர் இன்று இடம்பெற்ற நிகழ்விலிருந்து ஒதுங்கிக் கொள்வது என்ற முடிவோடு, நேற்றிரவு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர்.

தொடர்ந்து தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றது. அதன் பின்னர் குறித்த நிகழ்வை தடைசெய்யக்கோரி, விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர். உடனடியாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விஞ்ஞான பீடதிபதியோடு உரையாடினர். அந்த உரையாடலில் விஞ்ஞான பீடாதிபதி, தாங்கள் சிங்கள கலாசாரத்தை மதிப்பதாகவும், கண்டிய நடனம் கட்டாயமாக இடம்பெறும் என்றும் கூறினார்.

சிங்கள மாணவிகள் ஆடையணிந்தும் ஆடுவார்கள், ஆடையின்றியும் ஆடுவார்கள், அதை அவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். நீங்கள் இதற்குள் தலையிட வேண்டாம் என்று கூறினார். இதனால் விஞ்ஞான பீடாதிபதியுடன் முரண்பட்ட தமிழ் மாணவ பிரதிநிதிகள் அறையை விட்டு வெளியேறினர். தொடர்ந்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், விஞ்ஞான பீட தமிழ் – சிங்கள மாணவர்களை அழைத்து, கண்டிய நடனத்தை நிறுத்த முயற்சிகள் பல எடுத்தனர். அனைத்தும் தோற்றுப்போனது. சிங்கள மாணவர்கள் பக்கம் நின்ற பீடாதிபதி, விரிவுரையாளர்கள் காரணமாக அம்முயற்சிகள் தோற்றுப் போயின.

தொடர்ந்தும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், தனியாக சென்று விஞ்ஞான பீட பீடாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். அந்த உரையாடலின் முடிவில், தமிழ் கலாசாரத்தின்படி நிகழ்வுகள் இடம்பெறட்download-5டும் எனவும், கண்டிய நடனத்தை நிறுத்துவதாகவும் கூறி, மாணவ பிரதிநிதிகளை அனுப்பிவைத்தார் பீடாதிபதி.

அந்த உறுதிமொழிக்கு அமைவாக, இன்று காலை வரவேற்பு நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக வித்தியானந்தன் நூலக வாயிலிலிருந்து தொடங்கின. தமிழ் கலாசார முறைப்படி நாதஸ்வரம், மிருதங்கம் வாசிக்கப்பட்டு மாணவர்கள் வரவேற்கப்பட்டுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரெனக் குறுக்கிட்ட சிங்கள மாணவர்கள், தாம் அழைத்து வந்த கண்டிய நடனக் குழுவை ஆடவிட்டனர். கண்டிய நடனக்காரர்கள் சற்றுத்தூரம் ஆடிச் சென்றதும் கலவரம் தொடங்கியது. திட்டமிட்ட ரீதியில் தமிழ் மாணவர்களைக் குழுமி நின்று தாக்கினர். பின்னர் தமிழ் மாணவர்களின் ஏனைய பீடங்களின் மாணவர்களும் அங்கு கூடியதும் அவ்விடத்தில் கலவரமே வெடித்தது.

“இது எங்கள் நாடு. இது சிங்களத் தேசியம். இங்கு எங்கள் பண்பாடு மட்டும்தான் இருக்க வேண்டும்” எனக் கோசம் எழுப்பியவாறு தடிகள், பொல்லுகள், கம்பிகளைக் கொண்டு தமிழ் மாணவர்களை சிங்கள மாணவர்கள் தாக்கினர். தாக்குதல் உச்சமாக சிங்கள மாணவர்கள் அனைவரும் வேகமாக விஞ்ஞான பீட ஆய்வுகூடத்துக்குள் குவிந்தனர்.

ஆய்வு கூடத்தின் கதவு, யன்னல்களை அடித்து நொறுக்கினர். தங்கள் சிங்கள மாணவிகளை கம்பிகளால் கீறி காயப்படுத்திக் கொண்டனர். தமக்குத் தாமே அடித்துக் கொண்டனர். கம்பிகளால் கை, கால்களில கீறி காயமேற்படுத்திக் கொண்டனர். தமிழ் மாணவர்கள் தாக்கித்தான் தமக்குக் காயம் ஏற்பட்டது என, உடனடியாகவே அவ்விடத்தில் கூடிய பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களிடம் முறைப்பாடு செய்தனர். பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள் சிங்கள மாணவர்களைப் பாதுகாப்பாகக் கூட்டிச் சென்றனர்.

இதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களைத் தாக்கவும் ஓடிவந்தனர் சிங்கள மாணவர்கள்.

கலவரங்களுக்கிடையில் அகப்பட்டுக்கொண்ட, விஞ்ஞான பீட விரிவுரையாளர்களையும், யாழ்.பல்கலைக்கழக மார்ஷலையும் சிங்கள மாணவர்கள் தாக்கியுள்ளனர். இப்போது தாம் செய்தது பிழை என விஞ்ஞான பீட விரிவரையாளர்கள் தமிழ் மாணவர்களிடம் கூறி வருகின்றனர்.

மறுபுறத்தில் கலவரத்தில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களை அடையாளம் காட்டித் தருமாறும், அவர்களின் வீடியோக்கள், புகைப்படங்களை தருமாறும் புலனாய்வாளர்கள் மாணவர்களை மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டள்ளது. விடுதியில் உள்ள மாணவர்களை பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறும்படி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக சூழலில், பொலிஸாரும், புலனாய்வாளர்களும் குழுமி நிற்கின்றனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் திடீர் அறிவிப்பால் செல்லும் இடம் தெரியாமல் தெருவில் நின்று தவிக்கின்றனர்

Share This Post

Post Comment