பூமி, செவ்வாய், சூரியன் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் அரிய சந்தர்ப்பம் இன்று!

ekuruvi-aiya8-X3

mars-sun-earth-wiki-720x480பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய நிகழ்வு இன்று காலை நடைபெறவுள்ளது.

தற்போது பூமியில் இருந்து 4.8 கோடி மைல் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம், இந்த நிகழ்வின்போது 4.6 கோடி மைல் தொலைவில் பூமியை அண்மித்து வரும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

இன்று நடைபெறும் இந்நிகழ்வு இனி 2018ஆண்டு நடைபெறவிருக்கின்றது. அத்துடன் 2018ஆம் ஆண்டு நடைபெறும் இந்நிகழ்வின்போது செவ்வாய்க்கிரகமானது 3.6கோடி மைல் தொலைவுவரை பூமியை அண்மித்துவரும் என நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment