நெல்சல் மண்டேலா கைபேசி

ekuruvi-aiya8-X3

Mandela-Phonesநிறவெறிக்கு எதிரான கருத்தினை வளர்க்க நெல்சன் மண்டேலா கைபேசிகளை தென் ஆப்பிரிக்கா அறிமுகப்படுத்த உள்ளது.

நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர்.

அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நாளை ஜூலை 18-ம் தேதி நெல்சன் மண்டேலாவின் 98-வது பிறந்த தினம் ஆகும். இதனை முன்னிட்டு தென் ஆப்பிரிக்கா அரசு மண்டேலா பெயரிலான போன்களை அந்நாட்டில் அறிமுகப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு நெல்சன் மண்டேலாவின் சிந்தனையிலான கல்வியை கொண்டு செல்வதற்காக இத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த போன்களில் மண்டேலாவின் வாழ்நாள் வரலாறு, அவரது சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் தென் ஆப்பிரிக்காவின் வரலாறு மற்றும் சில சேவைகளும் இதில் இருக்கும். போன்களை பல்வேறு வகைகளில் குழந்தைகளை தேர்வு செய்து வழங்கப்பட உள்ளது.

ஏ.ஜி.மொபைல் என்ற நிறுவனத்துடன் இணைந்து தென் ஆப்பிரிக்கா அரசு இந்த திட்டத்தை மேற்கொள்கிறது.

Share This Post

Post Comment