நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் அடுத்த முதலமைச்சராவதற்கு முயற்சியா? தெரியாது என்கிறார் சீ.வி.விக்கினேஸ்வரன்

Facebook Cover V02

cvviki_07அடுத்த வடக்கின் மாகாண சபைத் தேர்தலில் யாழ். நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற அவரது அமைச்சின் கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளரை சந்தித்த போது, அடுத்த மாகாணசபைத் தேர்தலில் வடக்கு முதலமைச்சராக யாழில் உள்ள நீதித்துறையை சேர்ந்த ஒருவரை நியமிக்க சிலர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் அறிந்துள்ளீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போதே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை எனக்கு எவரும் இது தொடர்பாக சொல்லவில்லை. போட்டியிட வேண்டும் என என்னிடமே கேட்டு வருகின்றனர்.

நான் போட்டியிடுவதா இல்லையா என கடவுளே பார்த்துக் கொள்வார் என கூறியிருக்கின்றேன் என சிரித்தவாறு தெரிவித்தார்.

Share This Post

Post Comment