‘ரணிலில் கையிலேயே நீதித்துறை உள்ளது’ – பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ekuruvi-aiya8-X3

Untitled-720x450-450x281நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஏழு பேரையும் உடன் விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாணவர்கள், லஹிரு வீரசேகர தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர் அதற்கு வழங்கப்படும் தீர்ப்பை பிரதமரும் உயர்கல்வி அமைச்சரும் நாடாளுமன்றில் தெரிவித்துவிட்டதாகவும் அவ்வாறென்றால் நீதித்துறை சுயாதீனமாக உள்ளதென எவ்வாறு கூறமுடியுமென்றும் கேள்வி எழுப்பினர்.

மாலபே தனியார் கல்வி நிறுவனத்திற்கு எதிராக எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போதிலும் அதற்கெதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென குறிப்பிட்ட மாணவர்கள், குறித்த கல்வி நிறுவனத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோவே இன்று சிறையில் இருக்க வேண்டியவர் எனக் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், இவ்வாறான கைது நடவடிக்கைகளால் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாதென குறிப்பிட்ட மாணவர்கள், தமக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் என மேலும் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment