இலக்கு நீதிபதி அல்ல என பொலிஸார் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: சிவாஜிலிங்கம்

ekuruvi-aiya8-X3

shivaji15யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்டதல்ல என பொலிஸார் தெரிவிப்பது பலத்த சந்தேகங்களை எற்படுத்தியுள்ளதாக வட.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸார் அவசர அவசரமாக அந்த இடத்தில் சண்டை ஒன்று ந டைபெற்றது. அதனை தொடர்ந்தே நீதிபதியின் பாதுகாவலருடைய துப்பாக்கியை பறித்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறியிருந்தனர்.

நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்கு இந்த துப்பாக்கி பிரயோகம் நடந்திருக்கலாம் எனவே முழுமையான விசாரணைகளை நடத்தாமல் பொலிஸார் அவசரப்படுவது எதற்காக?

ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் நீதித் துறையின் சுதந்திரத்தை இந்த சம்பவம் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது. எனவே இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்” என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment