நீதன் சான் வெற்றி : ரொறன்டோ மாநகரத்தில் நகரசபை உறுப்பினராகத் தெரிவாகியுள்ள முதல் தமிழர் நீதன்

ekuruvi-aiya8-X3

டொரோண்டோ நகரசபையின் Scarborough-Rouge River தொகுதிக்கான நகரசபை உறுப்பினருக்கான இடைத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் நீதன் சன் 4763 வாக்குகளைப் பெற்று றுள்ளார். இது மொத்த வாக்குகளில் 45.76 சதவீதம் ஆகும்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் சுஹைர் சையத் என்ற வேட்பாளர், 1452 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நீதன் சன்னுக்கு, மாநகர முதல்வர் ஜோன் ரொரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ரொறன்டோ மாநகரத்தில் நகரசபை உறுப்பினராகத் தெரிவாகியுள்ள முதல் தமிழர் நீதன் சன் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு சமூக தளங்களில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளார்கள் . நேற்று காலையிலிருந்து அவரது தொண்டர்கள், நண்பர்கள் , Remax  Community ரியல் எஸ்டேட் நிறுவன முகவர்கள், ஐயப்பன் கோவில் நிர்வாக உறுப்பினர்கள், சமூக நலன் விரும்பிகள் , ஊடக நண்பர்கள் உற்பட 100 ம் அதிகமான அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும்  அவரது வெற்றிக்கு கடும் குளிரிலும் உழைத்துக் கொண்டிருந்தார்கள்  எனப்து குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வின் முழுமையான படங்களை பார்வையிட இதில் அழுத்தவும்

http://images.biztha.com/Toronto-2016/Neethan-Shan-wins-council-seat-in-Scarborough-Rouge-River/i-fJNBPQjDSC_4652-X3

neethan-shanDSC_4580-XL DSC_4685-XL DSC_4728-XL

Share This Post

Post Comment