நீர்வேலி இரட்டைக் கொலையாளிக்கு மரணமண்டனை தீர்ப்பு

ekuruvi-aiya8-X3

saddamநீர்வேலி மேற்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்க்கண்டு உதயகுமார் என்பவரையும், அவருடைய மனைவியாகிய உதயகுமார் வசந்திமாலா என்பவரையும் கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு, மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஏற்கனவே முடிவுற்றுள்ள சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அரச சட்டத்தரணி மற்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி ஆகியோர் தமது தொகுப்புரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இந்தத் தொகுப்புரைகளைச் செவிமடுத்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

மார்க்கண்டு உதயகுமார் என்பவரையும், அவருடைய மனைவியாகிய உதயகுமார் வசந்திமாலா என்பவரையும் கொலை செய்தததுடன், அவர்களின் மகனான உதயகுமார் குகதீபனைக் காயப்படுத்தி, அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, எதிரி குணா என்றழைக்கப்படும் அருணாசலம் குகனேஸ்வரன் என்பவருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment