நீர்வேலி பகுதியில்சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய தாய் கைது.

ekuruvi-aiya8-X3

neerveliநீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்க தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் தாயாரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்வேலி பகுதியில் வீடொன்றில் தாய் ஒருவர் சிறுமியை மூர்க்க தனமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் , கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உட்பட மூன்று சிறுமிகள் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளனர்.

Share This Post

Post Comment