நீர்ப்பறவையின் கேலிக் கோடு

ashvin

மீன்களை தரையில் எறிவதைப்போல
தொலைதூரம் வீசியெறிந்து
உன்னையும் நாம்தான் கொன்றோம்

புலத்தில் தந்தையர்
நிலத்தில் குழந்தையர்
வழிகளில்
ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும்
காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும்

கீவ் நகரை கடந்தவனைக் காணாது
ஊசியிலை காடுகளும் துடித்தன
போலாந்து எல்லையில்
வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர்
துயரப்பிக் கிடக்கின்றன
உன் கேலியின் கோடுகள்

கூடுகள் பறிபோயிருக்கலாம்
இரையற்று பசியில் மரிக்கலாம்
எல்லாப் பறவைகளும்
வலசைகளாயிருப்பதில்லை

ஆழ்கடலில் குழந்தைகளை
சுமந்தபடி அலைந்து
புகலிடம் நெருங்காது திரும்பிய
சிறு படகைப்போல

தன் தாய் மண்ணிலிருந்து
தூக்கி எறியப்பட்ட
புலம்பெயரா முக்குளிப்பான் பறவை*
உயிர் நீத்தது
உக்ரைன் காட்டில்.

இனிப்புக்காய் காத்திருக்கும்
உன் குழந்தையின் கண்ணீரில் நனையும்
வறண்டுபோன உன்னுடல்.
0
அஸ்வின் சுதர்சனுக்கு

தீபச்செல்வன்

*முக்குளிப்பான் பறைவை புலம்பெயராத நீர்ப் பறவையினம்


Related News

 • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
 • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
 • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *