தேவை 30 லட்சம் பஸ்கள் – ஓடுவது 3 லட்சம் மட்டுமே

ekuruvi-aiya8-X3

bus-0809நாடு முழுவதும் பொது மக்கள் பயணம் செய்ய 30 லட்சம் பஸ்கள் தேவைப்படும் நிலையில், புழக்கத்தில் 2.8 லட்சம் பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாட்டில் 19 லட்சம் பஸ்கள் இருந்தாலும், அதில், மாநில அரசின் கீழ் அல்லது மாநில அரசின் அனுமதி பெற்று 2.8 லட்சம் பஸ்கள் தான் இயங்குகின்றன எனக்கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து செயலர் ஓய்எஸ் மாலிக் கூறுகையில், பொது மக்கள் பயணம் செய்ய 30 லட்சம் பஸ்கள் தேவை. ஆனால், மாநில அரசுகள் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானது கிடையாது. இதனால் பெரிய இடைவெளி ஏற்படுகிறது என்றார்.

மத்திய அமைச்சர் கட்காரி கூறுகையில், சீனாவில் ஆயிரம் பேருக்கு 6 பஸ்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு நான்கு பஸ்கள் மட்டுமே உள்ளது. 90 சதவீத இந்தியர்களிடம் சொந்த வாகனங்கள் இல்லை. இதனால், பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. லண்டனில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து மாதிரியை இங்கும் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றார்.

போக்குவரத்து துறை நிபுணர்கள் கூறுகையில், தேவையான பஸ்கள் இல்லாததாலும், இயக்கப்படும் பஸ்களின் சேவை மோசமாக உள்ளதாலும் , நகர் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் சொந்தமாக வாகனங்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ ரயில் மற்றும் கால்டாக்சி தேவை கிடைத்தாலும், பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் அதிகளவில் இருக்கத்தான் செய்கின்றனர் என்றார்.

Share This Post

Post Comment