பாகிஸ்தான் திரும்பினார், நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கோர்ட்டில் இன்று ஆஜர்

Thermo-Care-Heating

nawas03பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28–ந் தேதி தகுதி நீக்கம் செய்தது. அத்துடன் அவர் மீதும், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்குகள் தாக்கல் செய்து, அவற்றை 6 மாத காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள்மீது இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்குகள் தாக்கலாகி உள்ளன.

இந்த நிலையில், புற்றுநோயினால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி குல்சூம் நவாசை பார்ப்பதற்காக கடந்த மாதம் 5–ந் தேதி அவர் லண்டன் சென்றார்.

ஒரு மாதம் நிறைவடைய உள்ள நேரத்தில், அவர் நேற்று பாகிஸ்தான் திரும்பினார். இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் காலை 8.20 மணிக்கு வந்திறங்கிய அவருக்கு கட்சித்தலைவர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் பஞ்சாப் இல்லம் சென்றார்.

அங்கு தேசிய பொறுப்புடைமை அமைப்பின் அதிகாரிகள் நேரில் சென்று, கோர்ட்டு சம்மனை அவரிடம் வழங்கினார்கள். அவர்களிடம், ‘‘நாளை (இன்று) நடக்க உள்ள விசாரணையின்போது கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆகிறேன்’’ என அவர் வாக்குறுதி அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ideal-image

Share This Post

Post Comment