நாவற்குழி விகாரை கட்டுமானப் பணி மீண்டும் ஆரம்பம்!

navatkuli-vihara-1நாவற்குழியில் அமைக்கப்பட்டு வந்த சிறீ சமிதி சுமண விகாரையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

நாவற்குழியில் மகிந்தராஜபக்ஷ காலத்தில் அத்துமீறிக் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் புத்த விகாரையொன்று கட்டப்பட்டது.

இதற்கு சாவகச்சேரிப் பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லையென பிரதேச சபையினால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூலை 7ஆம் நாள் கட்டுமானப் பணியை ஆரம்பிப்பதற்கு சாவகச்சேரி நீதிமன்றம் அனுமதியளித்தது.

60 அடி உயரத்தில் 10 இலட்சம் ரூபா செலவில் இந்த தாதுகோபம் அமைக்கப்படுகிறது.

இது தொடர்பாக சிறீ சமிதி சுமண விகாரையின் விகாராதிபதி ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கிலுள்ள கடும்போக்கு அரசியல்வாதிகளாலேயே விகாரை கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.






Related News

  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
  • இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
  • ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *