நாவற்குழியில் இராணுவக் குடியிருப்பு!

ekuruvi-aiya8-X3

Naavatkuzhi_03-e1465230941311யாழ்நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் ‘சிங்கள ராவய’ என்ற பெயரில் இராணுவக் குடியிருப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்திலேயே இக்கிராமத்துக்கு சிங்கள ராவய என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் திட்டத்தின்படியே இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாவற்குழியில் சிங்கள ராவய குடியிருப்பு என பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை. சிங்கள ராவய என்பது புத்த பிக்குகளால் பௌத்த மதத்தை பரப்புவதற்காக வழிநடாத்தப்படும் ஒரு அமைப்பு ஆகும்.

இக்கிராமம் அமைக்கப்பட்டு தற்போது அமைதியாகவும் எந்தவொரு எதிர்ப்புமின்றி விரிவாக்கப்பட்டுவருகின்றது.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன இராணுவத்தின் எஸ்.ரி.எப்வ். பிரிவுக்கு 5 ஏக்கர் காணி வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தக் குடியிருப்புக்குள் சில வாரங்களுக்கு முன்னர் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக்குடியிருப்புக்கு இரண்டு இராணுவ முகாம்கள் பாதுகாப்பு வழங்கியும் வருகின்றன.

நாவற்குழி புகையிரத நிலையத்தை அண்டிய பிரதேசம் அனைத்தும் சிங்களக் குடியிருப்பாக விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிங்களக் குடியிருப்பில் பாடசாலை, வைத்தியசாலை, பெளத்த விகாரை போன்றவை கட்டுவதற்கு அசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இக்கிராமமானது கைதடியிலமைந்துள்ள மாகாணசபைக் கட்டடத்திற்கு சில கிலோமீற்றர்கள் தொலைவிலேயே அமைந்துள்ளது. இக்குடியேற்றத்திட்டம் குறித்து நாவற்குழி மக்கள் பல முறைப்பாடுகள் செய்தபோதும் ஒன்றுமே பலனளிக்கவில்லை.

நாவற்குழிப் பிரதேசமானது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியையும் வலிகாமப் பகுதியையும் இணைக்கும் முக்கிய புள்ளியாக இருக்கின்றது.

போர் நிறைவுற்றதும் 2010ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 8ஆம் திகதி 193 சிங்களக் குடும்பங்கள் சிறீலங்கா இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்டு அப்போது கைவிடப்பட்டிருந்த புகையிரத நிலைய பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இதன் பின்னர், குறித்த சிங்களக் குடியேற்ற வாசிகள் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் தாம் அப்பிரதேசத்தில் வசித்து வந்ததாகக் கூறிவருகின்றனர்.

Share This Post

Post Comment