நாவல் பழ கொட்டையில் ஏராளமான சத்துக்கள்!

large_1340013797நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும்.

அப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்று தான் நாவல் பழம். இது குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும்.

நாவல் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவதுண்டு. சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

நாவல் பழக் கொட்டடக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அதில் உள்ள ஆல்கலாய்டுகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.

குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இதைவிட சிறந்த மருத்துவம் இல்லையென்று சொல்லலாம். நாவல் பழக்கொட்டையை அரைத்து அதை வடிகட்டி தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கிட்டதட்ட 35 சதவீதம் அளவுக்கு குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வேலையையும் இந்த நாவல்பழம் செய்கிறது. மிகவும் சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட்டாகவும் இது செயல்படுகிறது.

வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்தது நாவல்பழக் கொட்டை.

இத்தனை நன்மைகள் அந்த கொட்டையில் இருக்கும்போது இனிமேல் நாம் அதை தூக்கி வீசலாமா?


Related News

  • கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை
  • நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள்
  • பாகற்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவம்
  • சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்
  • உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதைப் படிங்க முதலில் !!
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *