நாச வேலை காரணமாக மின்சாரம் தடைப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – அஜித் பெரேரா

Facebook Cover V02

ajith pereraநாச வேலை காரணமாக நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும் தற்போதும் இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு அவகாசத்தை தருவதாகத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலன்றி மின்சாரத் தடைக்கான காரணங்களை கண்டறிய முடியாது எனவும் அதன் பின்னரே, மின்சாரத் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment