புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய முறைகள் குறித்து சர்வதேச விண்வெளி மையத்தில் நாசா முயற்சி

ekuruvi-aiya8-X3

nasa-cancerஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி  ஆய்வு மையம் அமைந்து உள்ளது. விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.
சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது.  அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதன் விளைவாக, ‘விண்வெளியில் மனிதன் வாழ முடியுமா?’ என்ற அடிப்படையான கேள்வி தொடங்கி, அங்கு வாழத்தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் உள்ளிட்ட பல தகவல்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு  நிறுவனமான நாசா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் மைக்ரோ ஆக்டிவிடி சயின்ஸ் குளோவ் பாக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி விண்வெளி வீரர் செரீனா அவுன்-சான்ஸலர் ஆன்ஜிக்ஸ் புற்றுநோய் சிகிச்சை ஆய்வுக்காக ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனோன் சான்செலர் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார். இரத்த நாளங்களின் மேற்பரப்புக்கு இட்டுச்செல்லும் உயிரணுக்கள் மீதான சோதனைகளை நடத்துவதற்காக அடுத்த சில மாதங்களும் அங்கேயே செலவிடுவார்.
நாசாவின் கூற்றுப்படி பூமியில் உள்ள ஒரு உயிரினத்தின் இரத்தத் திசுக்கள் எப்படி செயல்படுமோ அதைப்போலவே கலாச்சார உணவுகளில் உட்செலுத்தப்படும் நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன.
இதனால், சுழலும் செல்கள் பொதுவாக உடலில் இருந்துகொண்டு செயல்படுவது போலவே நடந்துகொள்கின்றன. புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஹிமோதெரபி சிகிச்சைக்கான செல்களை இன்னும் துல்லியமாக பரிசோதிக்க முடியும் என நாசா நம்புகிறது. இந்த சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment