நார­ஹேன்­பிட்­டியில் மீட்­கப்­பட்­டது பொட்டு அம்­மா­னி­னு­டைய தொப்பி? இருவர் கைது; விசாரணை தொடர்கிறது

ekuruvi-aiya8-X3

poddammanநார­ஹேன்­பிட்டி விரைவுத் தபால் (கூரியர்) நிறு­வன தலை­மை­யகம் ஒன்றில் வைத்து லண்­ட­னுக்கு அனுப்­பு­வ­தற்கு தயா­ராக இருந்த போது மீட்­கப்­பட்ட புலி­களின் உயர் மட்டத் தலை­வர்கள் பயன்­ப­டுத்தும் தொப்பி தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கொழும்பு தெற்­குக்குப் பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த சொய்ஸா, நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கயான் பிர­சன்ன ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் லண்­ட­னுக்கு அனுப்­பப்­பட ஆயத்­த­மாக இருந்த குறித்த தொப்­பி­யா­னது விடு­தலைப் புலி­களின் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த பொட்டு அம்­மா­னினால் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். இது தொடர்பில் சிற்­சில தக­வல்கள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு கிடைத்­துள்ள நிலையில் அதனை உறுதி செய்­து­கொள்ள தொடர்ந்தும் சூட்­சும விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந் நிலையில் இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய இரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

வவு­னி­யாவைச் சேர்ந்த குறித்த இரு­வ­ரையும் அங்கு வைத்தே கைது செய்­த­தா­கவும் அவர்­களை நேற்று முன் தினம் புதுக்­கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தா­கவும் அதன் போது அவர்­களை எதிர்­வரும் 20 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­ட­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந் நிலையில் சம்­ப­வத்தின் பின்­னணி மற்றும் நோக்கம் குறித்து பிரத்­தி­யேக மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இது குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,

கடந்த வாரம் நார­ஹேன்­பிட்­டியில் தலை­மை­ய­கத்தைக் கொண்ட விரைவுத் தபால் நிறு­வனம் ஒன்­றிற்கு லண்டன் நோக்கி அனுப்ப பொதி­யொன்று அனுப்­பட்­டுள்­ளது. காட் போர்ட் பெட்­டி­யி­னா­லான அந்த பொதியில் ஏற்­பட்ட சந்­தே­கத்தால் அதனைப் பிரித்து அந்த நிறு­வனம் சோதனை செய்­துள்­ளது.

இதன் போது அந்த பொதியில் 6 ரின் மீன்கள், 4 பால் ரின்கள், 4 பெட்­சீட்­டுக்கள் மற்றும் ஒரு காற்­சட்டை ஆகின இருந்­துள்­ளன. காட்­சட்­டையின் பைக்குள் மிக சூட்­சு­ம­மாக மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தொப்­பி­யொன்றி இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்தே நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்ட தக­வ­லுக்கு அமைய விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.

இதன் போது குறித்த தொப்­பி­யா­னது தமி­ழீழ விடு­தலை புலி­களின் உயர் மட்ட தலை­வர்கள் பயன்­ப­டுத்­து­வது என கண்­ட­றிந்த பொலிஸார், அந்த பொதி­யா­னது குறித்த விரைவுத் தபால் நிறு­வ­னத்தின் வவு­னியா கிளையில் இருந்து கொண்டு வரப்­பட்டு முகத்­து­வா­ரத்­தி­லி­ருந்தே நார­ஹேன்­பிட்டி தலை­மை­ய­கத்­துக்கும் அனுப்­பட்­டுள்­ளதை உறுதி செய்­து­கொண்­டனர்.

இத­னை­ய­டுத்து வவு­னியா சென்ற விஷேட பொலிஸ் குழு­வொன்று கடந்த வாரம் வவு­னி­யாவில் உள்ள குறித்த நிறு­வ­னத்தின் கிளைக்கு சென்று அங்­கி­ருந்த சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு கம­ராவை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. இதன் போது முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வரும் இருவர் அந்த பொதியை அங்கு ஒப்­ப­டைப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து முச்­சக்­கர வண்­டியில் வந்­த­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட வவு­னியா – மன்னார் பஸ் வண்டி ஒன்றின் சார­தி­யான ஒரு­வரை பொலிஸார் முதலில் கைது செய்­துள்­ளனர். அத­னை­ய­டுத்து அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமைய வவு­னியா, பூவ­ர­சங்­கு­ளத்தைச் சேர்ந்த 38 வய­து­டைய மற்­றொ­ரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இவ்­வி­ரு­வ­ரையும் பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்­து­வந்த நிலை­யி­லேயே நேற்று முன் தினம் புதுக்­கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இது வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் குறித்த பொதி­யா­னது லண்­டனில் உள்ள இலங்­கை­ய­ரான ஒரு­வ­ருக்கு அனுப்­பட இருந்­த­மையும் சந்­தேக நபர்கள் இரு­வரும் முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள் என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது.

இந் நிலையிலேயே இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல்தெனிய ஆகியோரின் மேற்பார்வயில் உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த சொய்ஷாவின் ஆலோசனைக்கு அமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment