நந்திக் கடல் நீரேரி புனரமைக்கப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள் – டக்ளஸ் தேவானந்தா!

Thermo-Care-Heating

nanthikadalதற்போது நாட்டில் வறுமையில் முதலாமிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலை புனரமைப்புச்செய்வதன்மூலம் 15,000 வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்கள் பயனடைவர் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

3120ஹெக்டயர் பரப்பளவைக்கொண்ட பாரிய நீரேரியான நந்திக்கடலானது 2கிலோமீற்றர் ஒடுங்கிய கால்வாய்மூலமாக வட்டுவாகல் கடலுடன் கலக்கின்றது.

தற்போது நந்திக்கடலில் பாரியளவில் கழிவுப் பொருட்கள் புதைந்து, படிந்துக் கிடப்பதாலும், மழை காலத்தில் மேலும் வண்டல் மண் சேர்ந்தும் இதனது ஆழம் குறைந்துள்ளதுடன், கடலினுள் ஏரியின் நீர் கலக்குமிடத்திலுள்ள பாலத்தடியில் படிவுகள் அதிகம் படிந்து நீரோட்டத்தினைத் தடுத்தும் வருகின்றன.

இதனால் அங்கு மீன் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதுடன், காலநிலை மாற்றத்தின்போது மீன்கள் பாரியளவில் இறக்கும்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நந்திக் கடல் நீரேரியின் மூலமாக நேரடி பயன்களைப் பெறுகின்ற சுமார் 10 ஆயிரம் மக்களும்இ மறைமுகமான பயன்களைப் பெறுகின்ற சுமார் 5 ஆயிரம் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுஇ தங்களது வாழ்வாதாரங்களுக்காக நிவாரணங்களைக் கோருகின்ற நிலை சுமார் இரண்டு வருட காலமாக ஏற்பட்டுள்ளது.

நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மூலம் நந்திக்கடலை புனரமைப்புச் செய்து மக்களின் வறுமையைப்போக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment