நலன்புரி செயற்பாடுகளுக்கு பொருளாதாரம் தடையாக உள்ளது

ekuruvi-aiya8-X3

ranil1554உலகில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதால் நலன்புரி நிலையங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை குறைந்தளவிலேயே மேற்கொள்ள முடிவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றுவரும் 107 ஆவது சர்வதேச றோட்டரி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குள்ளான நாடுகள் அதிலிருந்து மீண்டுவருவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்த பிரதமர் அரச சேவையை வினைத்திறன் மிக்கதாக மாற்றக்கூடிய வல்லமை, சேவை வழங்கும் நிறுவனங்களுக்கே உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில், இந்நிலைமை அனுபவ ரீதியாக உணரப்பட்ட உண்மையென்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையை போலியோ அற்ற நாடாக மாற்றுவதற்கு சர்வதேச றோட்டரிக் கழகம் மற்றும் யுனிசெப் மற்றும் சர்வதே செஞ்சிலுவைச் சங்கம் என்பன அளப்பரிய பணியை ஆற்றியுள்ளன எனவும் அதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

ஐநா செயலாளர் பான்கிமூன் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் றோட்டரிக் கழகம் இணைந்தமையானது, விலைமதிக்கமுடியாத ஒன்று எனவும், உலக நாடுகளில் போலியோவை ஒழிப்பதற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட உன்னதமான செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment