இலங்கைக்கு தற்போது நண்பர்கள் இருக்கின்றார்கள் – ஜனாதிபதி

Facebook Cover V02

maithiriஇலங்கைக்கு தற்போது நண்பர்கள் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட ஓர் காலம் காணப்பட்டது எனவும் தற்போது அவ்வாறான நிலைமை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலக நாடுகள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்குறுதி அளித்ததனைப் போன்று செயற்படுவேன் என்ற நம்பிக்கையில் மக்கள் தமக்கு வாக்களித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலை நடத்தியிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment