அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு

sdsd

Naanjil_sampathதமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார்.

இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவர், பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொள்கிறார்.

இந்த நிலையில் அ.தி.மு.கவின் உறுப்பினராக இருந்த நடிகர் ஆனந்தராஜ் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரை போல மேலும் சிலர் கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று கூறப்பட்டது.

இதனை உறுதிப்படுத்துவது போல அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளராக உள்ள நாஞ்சில் சம்பத் கட்சியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியானது. அவர், தி.மு.க.வில் சேருவார் என்றும் கூறப்பட்டது.

இதற்காக அவரை தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் சந்தித்து பேசியதாகவும், விரைவில் அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் நாஞ்சில் சம்பத் தரப்பில், யாரும் இதை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத்தின் நெருங்கிய நண்பர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், நான், உடல்நலமின்றி அவதிப்பட்டபோது எனக்கு உயரிய சிகிச்சை அளித்து என் உயிரை காப்பாற்றியவர் ஜெயலலிதா. அந்த நன்றி உணர்வு என்னில் உறைந்துள்ளது. இப்போது அவர் இல்லாத அ.தி.மு.க.வில், அவருக்கு பதிலாக பொறுப்பேற்ற தலைமையை ஏற்க முடியவில்லை. அதை ஏற்று பிரசாரம் செய்தால் அது என் தமிழுக்கு சுளுக்கை ஏற்படுத்தி விடும். நான், என் தமிழுக்கு கடமையாற்ற விரும்புகிறேன். அந்த மாண்பை பரப்பவே தி.மு.க.வுக்கு செல்ல விரும்புகிறேன். இதுபற்றிய தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன், என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நாஞ்சில் சம்பத்தின் நண்பர்கள் தெரிவித்தனர்.

நாஞ்சில் சம்பத்துக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர் முன்பு ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த போது இந்த நண்பர்களும் அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment