மூட நம்பிக்கைகளை தகர்த்து சீமான் வேட்புமனு தாக்கல்

ekuruvi-aiya8-X3

seeman1-600-தமிழகத்தின் அரசியல் தலைவாகள் பலரும் சுபநேரம் பார்த்து வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்ற நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாhளர் சீமான், தேய்பிறை தினமான இன்று செவ்வாய்க் கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் மே16 ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அந்தவகையில் அவர், தன்னுடைய வேட்புமனுவை இன்றைதினம் தாக்கல் செய்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் பணத்தை நம்பி நிற்பதாகவும், கொள்கைகள், மக்களுக்கு செய்யப்போகும் நன்மைகளை கூறி தாங்கள் வாக்கு சேகரிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், 100 சதவிகித வாக்குப் பதிவிற்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் தேர்தல் ஆணையகம், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

Share This Post

Post Comment