மத நம்பிக்கைகளின் பெயரால் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது: பிரதமர் மோடி

Modi_71-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

பின்னர் அவர் ஆற்றிய சிறப்புரையில், ‘மகாத்மா காந்தியும், புத்தரும் பிறந்த இந்த மண்ணில் அனைவரையும் ஒன்றுதிரட்டி வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதுதான் மரபாக உள்ளது. எனவே, மத நம்பிக்கைகளின் பெயரால் நாட்டில் நடைபெறும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது’ என தெரிவித்தார்.

சமுதாயத்துக்குள் சாதியமும், மதவாதமும், வகுப்புவாதமும் நஞ்சைப் போன்றது, இதனால், நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையர்களை நோக்கி இந்தியாவை வெளியேறுங்கள் என்று முழங்கியதைப்போல் இந்தியாவை இணயுங்கள் என்ற முழக்கம் தற்போது தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment