நம்பிக்கை இழந்துவிட்டோம்; உயிரைத் துறப்பதை விட வேறு வழியில்லை!

Thermo-Care-Heating

anurathapura-jail-720x480அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உள்ள அரசியல் கைதிகள் தமக்கான தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், உயிரை துறப்பதை விட வேறுவழி இல்லை எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு தவிர்ப்பு போராட்டத் தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக கலந்து ரையாடுவதற்கு ஜனாதிபதி மைத் திரி பாலசிறிசேனவை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் உறவி னர்கள் நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதில் உறுதியான முடிவு எவையும் எட்டப்படாத நிலையில் மேற்குறித்த அரசியல் கைதிகள் மூவரும் தமது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

26 ஆவது நாளாக உணவு இன்றி நீரை மட்டும் அருந்தி வரும் இவர்களுடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றமை குறி ப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment