நமல் ராஜபக்ஷவை மகசீன் சிறையில் சந்தித்தார் மகிந்தராஜபக்ஷ!

ekuruvi-aiya8-X3

appa_mahintha_001கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மூத்த மகனை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இன்று மாலை சந்தித்துள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பகல் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ கோட்டை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, கோட்டை மேலதிக நீதிமன்ற நீதவான் நமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நமல் ராஜபக்ஷ கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது மகனைப் பார்வையிடுவதற்காக மகிந்த ராஜபக்ஷ மகசீன் சிறைச்சாலைக்கு இன்று மாலை சென்றார்.

Share This Post

Post Comment