குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினருக்கு நன்கு தெரியும் – நல்லூர் பிரதேசசபைச் செயலர்!

Thermo-Care-Heating

nalloorயாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் கஞ்சா விற்பவர்களையும், வாளுடன் நடமாடுபவர்களையும் காவல்துறையினருக்கு நன்கு தெரியும். அவர்களே அவற்றைக் கட்டுப்படுத்தமுடியும். இல்லாவிட்டால் 50 குழுக்களை அமைத்தாலும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாது என நல்லூர் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சிவில் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் பரவலான மணல் கடத்தல், வாள்வெட்டுத் தாக்குதல்கள், கஞ்சாவிற்பனை,சட்டவிரோத மதுபானம்விற்றல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை காவல்துறையினருக்கு நன்கு தெரியும். அவர்களே இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

அரியாலைப் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தஅங்கு ஒரு காவல்துறை காவலரணை அமைக்கவேண்டுமெனக் கோரி தற்போது அங்கு காவலரண் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றச்செயல்கள் நடக்கும்போது அவர்களிடம் தெரியப்படுத்தினால் காவல்நிலையத்தில் போய் முறையிடுமாறு கூறுகின்றனர்.

சட்டவிரோத மணல் கடத்துபவர்கள் தொடர்பாக முறையிட்டால் கடத்தியவரின் பெயர், வாகனத்தின் இலக்கம், கடத்தியவரின் வீட்டு முகவரி என பல விபரங்கள் கேட்கின்றனர். அவ்வாறெனில் எவ்வாறு காவல்துiறியடம் போய் முறையிடமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment