கட்டாயம் நாய் இறச்சி சாப்பிடுங்கள் – வடகொரிய ஜனாதிபதி

ekuruvi-aiya8-X3

dog-300x182நாய் இறைச்சியில் தேவையான அளவு வைட்டமின் உள்ளதால் அவற்றை குடிமக்கள் அனைவரும் அதிகம் சாப்பிட வேண்டும் என வட கொரியா ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். வட கொரியாவை சேர்ந்த அரசு ஊடகங்களான DPRK Today, Tongil Voice உள்ளிட்ட சேனல்கள் இந்த பரபரப்பு தகவலை மக்களிடம் பரப்பி வருகின்றன. ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன.

மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத அளவிற்கு நாய் இறைச்சியில் அதிகம் வைட்டமின் உள்ளது. எனவே, இவற்றை குடிமக்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என ஜனாதிபதி கிம் யோங் –அன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஒரு நாயை சித்ரவதை செய்து கொன்ற பிறகு அதன் இறைச்சியை சாப்பிட்டால் அது மேலும் சுவையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் நாய்களை அடித்து துன்புறுத்திய பிறகு தான் கொல்ல வேண்டும் என அந்த ஊடகம் வலிறுத்தியுள்ளது. வட கொரியாவில் செயல்படும் பிற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘குறிப்பாக, நாய்க் குட்டிகளின் மிருதுவான இறைச்சி நோயாளிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது’ என தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வட கொரியா நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது மிகவும் பிரபலம் ஆகும். குறிப்பாக, வட கொரியாவில் உள்ள இறைச்சி கூடங்களில் இன்றளவும் நாய்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment