ஆசிய நாடுகளின் கத்தோலிக்க மேற்றாணியார்களின் சர்வதேச மாநாடு இலங்கையில்

ekuruvi-aiya8-X3

International-Conference-of-Asian-Catholicஆசிய நாடுகளின் கத்தோலிக்க மேற்றாணியார்களின் சர்வதேச மாநாடு இம்முறை இலங்கையில் நவம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை நீர்கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன் போது ஆசிய பிராந்தியத்தின் அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் எட்டு பேராயர்களும், 150 மேற்றாணியர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக ஆசிய நாடுகளில் உள்ள கத்தோலிக்க மக்கள் மத்தியில் சிறந்த நல்லுறவை கட்டியெழுப்புவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்த செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க ஆசிய பிராந்திய மேற்றாணியர்களின் பிரதான செயலகம் ஒன்று ஹொங்கொங் நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் வருடாந்தம் மேற்றாணியார் மாநாடு ஆசிய நாடுகளில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment