இந்தியா, தாய்லாந்து, மியான்மர் நாடுகளை 1,400 கி.மீ நெடுஞ்சாலையால் இணைக்க திட்டம்

India-Thailandபல ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இந்த 3 நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகள் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரின் போது கட்டப்பட்ட 73 பாலங்கள் மியான்மரில் தற்போது மீண்டும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பாலங்கள் இந்தியாவை இணைக்கும் நெடுஞ்சாலைகளுடன் தொடர்புடையது. இன்னும் 18 மாதங்களுக்குள் புனரமைப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மியான்மர், இந்தியா நாடுகளுடன் இணையும் வகையில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய பகுதியான மெரேவில் இருந்து மியான்மரின் தமு சிட்டி வரையில் நெடுஞ்சாலைப் போக்குவரத்து திறக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை தாய்லாந்தின் மா சாட் மாவட்டத்தில் உள்ள தாக் வரை சென்றடையும்.

தற்போது இந்த 3 நாடுகளுக்கும் இடையே போடப்பட்டுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி புனரமைக்கப்படும் பாலங்கள் மற்றும் 1,400 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலையை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஏற்கனவே, மியான்மரின் தாவேய் ஆழ்கடல் துறைமுக திட்டமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இந்த துறைமுகத்தை சென்னை மற்றும் தாய்லாந்து லேம் சபாங் துறைமுகத்துடன் இணைக்க இயலும்.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் தாய்லாந்து சென்று வருகின்றனர். இருநாடுகளுக்கும் இடையே சென்ற ஆண்டில் மட்டும் 8 பில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Related News

 • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்
 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்
 • பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *