நடிகையின் நிர்வாணப் படங்கள் – நடிகை கொடுத்த சவுக்கடி!

jothiசமூக வலைத்தளங்களில் சில நாட்களாக வலம்வரும் பிரபல மலையாளப்பட கதாநாயகி ஜோதி கிருஷ்ணாவின் நிர்வாணப் படங்கள், இந்தியாவை தாண்டி, கடல்கடந்தும் பலரது தூக்கத்தை கெடுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக, இதுவரை எந்த நடிகையும் அளிக்க முன்வராத ஒரு தன்னிலை விளக்கத்தை நடிகை ஜோதி கிருஷ்ணா வெளியிட்டுள்ளார்.

’ஒரு கேவலமான குடும்பத்தில் பிறந்த மகனோ, மகளோ தங்களது தாயின்/ சகோதரியின் உடல் உறுப்புகளின்மீது எனது முகத்தை வைத்து மார்பிங் செய்து வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டுள்ளான்/ள். இது பல்லாயிரக்கணக்காவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது.

என்னைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் பலர், இவ்விவகாரத்தில் எனக்கு ஆதரவாக ஆறுதல் கூறி வருகின்றனர். எனவே, எனது முகத்துடன் கூடிய மார்பிங் படங்களை வெளியிட்டவன்/ள் தனது முயற்சியில் வெற்றி பெறவில்லை என்பதையே எனக்குவரும் ஆறுதல் செய்திகள் காட்டுகின்றன. எனவே, இதுதொடர்பாக நான் தனியாக விளக்கம் எதுவும் அளிக்க விரும்பவில்லை.

எனக்கு பக்கதுணையாகவும், ஆதரவாகவும் ஆறுதல் செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜோதி கிருஷ்ணா பதிவிட்டுள்ளார்.

தன்னை கேவலப்படுத்த நினைத்தவர்களுடன் ’நீச்சீ, நான்ச்சீ’ என்று குடுமிப்பிடி சண்டை போடாமல் மிகசாதுர்யமாக இந்தப் பிரச்சனையை அவர் கையாண்டுள்ளதாக மலையாள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


Related News

 • ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
 • கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
 • சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
 • ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
 • 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
 • விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்
 • சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து
 • இப்போ ஹீரோக்கள் கதை சொல்ல தொடங்கிவிட்டார்கள் – பேரரசு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *