நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வறட்சியால் குடிநீர்த் தட்டுப்பாடு!

Thermo-Care-Heating

varadsiநாட்டில் கடந்த மாதத்திலிருந்து ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வறட்சியினால் பல மாவட்டங்கள் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தொடர் வறட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம் மற்றும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று இரவு 10 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்துவிடப்படவுள்ளன. இதனால், மகாவலி ஆற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மகாவலி அதிகார சபையின் பொறியியலாளர் வி.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை வறட்சியால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களுக்கு 18.1 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரம் நீர்த்தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment