நாட்டை தவறான பாதைக்கு கொண்டு செல்ல மாட்டேன்-மோடி

ekuruvi-aiya8-X3

Modi-450x285நாட்டை தவறான பாதைக்கு கொண்டு செல்ல மாட்டேன் என்று தாவணகெரெயில் நடைபெற்ற 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார்.

மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகள் ஆனதையொட்டி பா.ஜனதா சார்பில் ‘விகாச பர்வ‘ என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

மோடி பேசியதன் விவரம்:-

நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வாரத்திலேயே என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். நாட்டில் ஜனநாயகத்தை ஆதரித்து பேசும் சிலர் இருக்கின்றனர். அவர்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நம்புவதில்லை.

தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நான் எங்கிருந்து வந்தேனே அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. நான் இந்த மண்ணில் இருந்து தான் வந்தேன். உங்களில் ஒருவன் தான்.

நான் கடந்த இரண்டு வருடங்களாக செய்ததெல்லாம் மக்களின் நலன் சார்ந்தவையே. சிலர் மோடி பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். முந்தைய அரசு ஒரு சிலருக்கு மட்டும் பெரிதாக செய்தது. அதனையே நானும் தொடருட்டுமா?. நானும் அதே பாதையில் போக வேண்டுமா?

இன்னும் ஒரு சில விஷயங்கள் செய்யாமல் இருக்கலாம், ஆனால் நாட்டை தவறான பாதையில் செல்ல விட மாட்டேன்.

பல்வேறு திட்டங்கள் பல்வேறு துறைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்கள் மாற்றத்தை உணர்கிறார்கள். நாட்டை புதியதோர் உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்கு மக்களின் ஆதரவு தேவை.

மக்களுக்கு சுமையாய் உள்ள தேவைக்கு அதிகமான 1200 சட்டங்களை நீக்கியுள்ளோம். விவசாயிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்க செய்தால், அவர்கள் தங்கத்தை விளைவிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment