சமஸ்டி குறித்த பேச்சுக்கள் நாட்டை பிளவடையச் செய்யும்

ekuruvi-aiya8-X3

kunavansaசமஸ்டி குறித்த பேச்சுக்கள் நாட்டை பிளவடையச் செய்யும் என தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் அல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், வட மாகாண சபையின் தலைவரும் சமஸ்டி ஆட்சி முறைமை ஆட்சி கோருகின்றனர்.

பிரிவினைவாத நோக்கங்களை அடையும் நோக்கிலேயே சமஸ்டி முறைமையை கோரி வருகின்றனர்.

நாட்டை பிளவடையச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறான முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மக்கள் ஆதரவற்ற சிலர், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இவ்வாறு கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கு கிழக்கு மக்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு தனியான பிரச்சினைகள் இருக்கும் என நான் கருதவில்லை.

போர் காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட 25000 சிங்களவர்கள் பற்றி இவர்கள் எவரும் பேசுவதில்லை.

சமாதானம் நல்லிணக்கம் பற்றி பேசும் அரசாங்கத்தின் தலைவர்கள் வடக்குத் தலைவர்களின் சமஸ்டி முறைமை குறித்த நிலைப்பாட்டுக்கு நேரடியான பதிலை அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Post

Post Comment