நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய பியதாஸ!

Facebook Cover V02

parliment87866565ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ கடந்த புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தமிழில் உரையாற்றினார்.

ஆட்பதிவு தொடர்பான திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் தமிழில் உரையாற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் முதலில் தனது உரையைச் சிங்களத்தில் ஆட்பதிவு தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டுமெனத் தெரிவித்து சிங்களத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த அவர் இடையில் தமிழில் விசேடமாக நுவரெலியா மாவட்டத்தில் பலர் அடையாள அட்டையினைப் பெறுவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டதுடன் தொடர்ந்து தமிழில் உரையாற்றினார்.

நுவரெலியா மாவட்டத்தில் இப்போதும் பலர் அடையாள அட்டைகளின்றி வாழ்வதாகவும், குறிப்பாக பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தினாலேயே பலர் அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மத்திய மாகணத்தில் விசேட நிலையம் ஒன்றை அமைக்கவேண்டுமெனத் தெரிவித்த அவர் இதனைத் தொடர்ந்து மீண்டும் சிங்களத்தில் உரையாற்றியுள்ளார்.

Share This Post

Post Comment