நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை தயார்!

ekuruvi-aiya8-X3

karu-jayasuriya-parliamentநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை தயார்செய்யப்பட்டுவிட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவைகள் அனைத்தும் தயார்ப்படுத் தப்பட்டுவிட்டன. தற்போது அவைகள் கட்சித் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களின் அனுமதி பெறப்படும். பின்னர் அது மொழிபெயர்ப்புப் பணிக்கும் விடப்படவுள்ளது.

விரைவில் இந்த ஒழுக்கக் கோவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கானது பத்தரமுல்லையிலுள்ள வோட்டர் எட்ஜ் விடுதியில் நடைபெற்றதுடன் இதனை அமெரிக்காவின் யுஎஸ் எயிட் நிறுவனம் ஒழுங்குபடுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment