ஸ்டாலின் முதல்வராவதை கருணாநிதி விரும்பவில்லை?

kalainarஅதிமுகவின் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என திருநெல்வே லி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திமுக திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன், கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, கடந்த 14 மாதங்களுக்கு முன் கட்சி யில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் 1972 முதல் 1996 வரை எம்.ஜி.ஆர். மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எனக்கு, கிராம கிளைச் செயலாளர் முதல் மாநில துணைச் செயலாளர் வரை பல்வேறு பதவிகளைத் தந்து அழகுபார்த்தனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்ததற்கான பலனை தற்போது அனுபவித்து வருகிறேன்.

திமுகவில் துரோகிகளும், முதுகில் குத்துபவர்களும் நிறைந்துள்ளனர். மு.க.ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க வேண்டும் என திமுக கூட்டத்தில் தெரிவித்தேன்.

ஆனால், ஸ்டாலின் முதல்வராவதை கருணாநிதி விரும்பவில்லை. அதனால் நான் ஓரங்கட்டப்பட்டேன். கட்சியில் எல்லோரும் என் மீது கல்லைத் தூக்கிப் போட்டனர்.

கடைசியாக ஸ்டாலினும் பெரிய கல்லை என் மீது போட்டுவிட்டார். என்னை கட்சியை விட்டே வெளியே போகச் செய்துவிட்டனர்.

தற்போது எல்லா புகழும் அம்மாவுக்கே என வந்துள்ளேன். அம்மாவின் கருணை பார்வைக்காக காத்திருக்கிறேன்.

தாய் வீட்டுக்கு போகும் பிள்ளையாக தாய் வீட்டு வாசலில் காத்திருக்கிறேன்.

அதிமுகவின் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்தால் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளேன்.

மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என பேசியுள்ளார்.


Related News

 • தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
 • முதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது – லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்
 • கங்கை நதி தூய்மையாகும் என்கிறார் நிதின் கட்கரி
 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *