வட மாகாண முதலமைச்சரை கைது செய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை

cvviki_07வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த அமைப்பான சிங்கள ராவய அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தனியான அலகு ஒன்றை உருவாக்க வேண்டுமென முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில், கைது செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் அரசியல் அமைப்பினை மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க காட்டிய முனைப்பை பிரிவினைவாத சக்திகளை இல்லாதொழிக்கவும் காட்டியிருந்தால் இன்று எவ்வித பிரச்சினையும் இருந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.






Related News

  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
  • இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
  • ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *